கேப்டனாக கோலி செய்யாத சாதனையை செய்து காட்டிய ரோஹித்..!

First Published Feb 27, 2018, 2:27 PM IST
Highlights
rohit sharma new record as captain


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோஹித் தலமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் கேப்டனாக ரோஹித், புதிய சாதனையை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக கேப்டன் கோலி ஆடவில்லை. அதனால் ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்று, அணியை சிறப்பாக வழிநடத்தி அணியை வெற்றியடைய செய்தார். அதனால் இந்திய அணி 2-1 என டி20 தொடரை வென்றது.

அந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கேப்டனாக ரோஹித் புதிய சாதனையை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 4 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை ரோஹித் பெறுகிறார். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளுக்கு ரோஹித் கேப்டனாக இருந்தார். அப்போது இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தியது. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 4 டி20 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.

ரோஹித்துக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஷாகித் அஃப்ரீடி, சர்பராஸ் அகமட், இலங்கையின் குமார் சங்கக்காரா, லஷித் மலிங்கா ஆகியோர் தங்களது கேப்டன்சியில் முதல் 4 டி20 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!