கில்கிறிஸ்டையே அசால்ட்டா முந்திய நம்ம ரிஷப் பண்ட்!! சர்வதேச சாதனையை சமன் செய்து அசத்தல்

By karthikeyan VFirst Published Dec 10, 2018, 11:40 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சாதனை படைத்துள்ளதோடு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் சர்வதேச சாதனையை சமன் செய்துள்ளார். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சாதனை படைத்துள்ளதோடு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் சர்வதேச சாதனையை சமன் செய்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவது இதுதான் முதன்முறை. அந்த வகையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணி மட்டும் சாதனை செய்யவில்லை. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் சர்வதேச சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். தனது விக்கெட் கீப்பிங் டெக்னிக் குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துவந்த ரிஷப் பண்ட், இந்த டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட், இரண்டாவது இன்னிங்ஸில் 5 கேட்ச்களை பிடித்து, மொத்தமாக இந்த போட்டியில் 11 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்களை பிடித்த ரசல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பரால் அதிகமாக பிடிக்கப்பட்ட கேட்ச்களே 11 தான். அதை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். 

இவர்களுக்கு அடுத்து 10 கேட்ச்களுடன் ஆடம் கில்கிறிஸ்ட், ரிதிமான் சஹா,  இங்கிலாந்தின் பாப் டெய்லர் ஆகியோர் உள்ளனர். 
 

click me!