
டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஜஸ்பிரீத் பும்ரா இரண்டம இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அதேவேளையில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலேயே தொடருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்த தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்து, மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் இமத் வாசிம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்ஸ்மேன் பட்டியலில், கோலியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக ஓட்டங்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 12 இடங்கள் முன்னேறி, 20-வது இடத்துக்கு வந்துள்ளார்.
சக நாட்டவரான ஜேசன் ராய் 26 இடங்கள் முன்னேறி, தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 25-வது இடத்துக்கு வந்துள்ளார்.
டி20 அணிகளுக்கான தரவரிசையில் 125 புள்ளிகளுடன் நியூஸிலாந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 123 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 110 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு வந்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.