எனக்கு அது முன்னாடியே தெரியும்.. ரஷீத் கான் சொன்ன ரகசியம்

 
Published : May 26, 2018, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
எனக்கு அது முன்னாடியே தெரியும்.. ரஷீத் கான் சொன்ன ரகசியம்

சுருக்கம்

rashid khan believe himself

கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்திய ரஷீத் கான், தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து போட்டியின்போது 100% உழைப்பை கொடுத்ததாக தெரிவித்தார்.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் தகுதி சுற்று போட்டியில் தோற்ற ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் வென்ற கொல்கத்தாவுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்திய ரஷீத் கான், 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தார். 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத் கான், பவுலிங்கிலும் அசத்தினார். 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் கொல்கத்தாவின் நம்பிக்கையாக திகழ்ந்த கிறிஸ் லின், ரசல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரஷீத். நிதிஷ் ராணாவை ரன் அவுட்டாக்கினார். மேலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய, ஷுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவியின் கேட்ச்சுகளையும் அபாரமாக பிடித்து அசத்தினார்.

இவ்வாறு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொல்கத்தாவை ஹைதராபாத் அணி வீழ்த்த முக்கிய காரணமாக ரஷீத் திகழ்ந்தார். ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை வழங்குகிறார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற ரஷீத் கான் பேசியபோது, இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்ஸ்மேனாகத்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். அதனால் பேட்டிங் நன்றாக ஆடமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் திறமை மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் 100% உழைப்பை கொடுத்தேன். பயிற்சியாளர்கள் கூறிய அறிவுரைப்படி எந்தவிதமான பந்துகளாக இருந்தாலும் அடித்து ஆடினேன் என ரஷீத் கான் தெரிவித்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!
ஜூனியர் சச்சின் ரெடி.. வைபவ் சூர்யவன்ஷியை உடனே இந்திய டீம்ல சேருங்க.. வலுக்கும் கோரிக்கை!