ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் இளம் வீரர்..? உலக கோப்பை கனவு கலையும் அபாயம்.. தமிழ்நாட்டு வீரருக்கும் சான்ஸே இல்ல

By karthikeyan VFirst Published Dec 24, 2018, 12:05 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் என உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய தொடர்கள் என்பதால் இந்த 2 தொடர்களுமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெறும் வீரர்களே உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவர். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய 2 போட்டிகளும் முடிந்ததும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் என உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய தொடர்கள் என்பதால் இந்த 2 தொடர்களுமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடும் வீரர்களே உலக கோப்பை அணியில் இடம்பெறுவர். 

அந்த வகையில் இந்த தொடர்கள் உலக கோப்பைக்கான முன்னோட்ட தொடர்களாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர்களிம் இடம்பெறும் வீரர்களை வைத்து உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் வீரர்களை ஓரளவிற்கு அனுமானித்துவிட முடியும். 

அப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கும் ராகுலுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவந்த மிடில் ஆர்டர் பிரச்னைக்கு, நான்காம் இடத்திற்கான தீர்வாக ராயுடு கிடைத்துவிட்டார். ரிஷப் பண்ட், தோனி, ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்ட பேட்டிங் வரிசைதான். 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற இடம் உறுதியாக தோனிக்குத்தான். அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் தேவை என்றால் அது கண்டிப்பாக ரிஷப் பண்ட் தான் என்பதையும் தேர்வுக்குழு உறுதி செய்துவிட்டது. எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிவரும் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பிவிட்டார். 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 48 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். எனவே அவரது மோசமான ஃபார்மின் காரணமாக அவர் ஒருநாள் அணியிலிருந்து கழட்டிவிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒருவேளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் கழட்டிவிடப்பட்டால், உலக கோப்பை அணியில் இடம்பெறுவது சந்தேகம்தான். விரைவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. 
 

click me!