கொல்கத்தாவை வீழ்த்தியது புனே சிட்டி…

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 03:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
கொல்கத்தாவை வீழ்த்தியது புனே சிட்டி…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி புனே சிட்டி அணி வெற்றி பெற்றது.

புனேவில் ஞாயிற்றுக்கிழமை விருவிருப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு புணே அணிக்கு கிடைத்தது.

இந்த ஆட்டத்தின் 41-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜோனாதன் லூக்கா பாஸ் செய்த பந்தை மிகச் சரியாக கோலாக்கினார் சக வீரர் ஃபெர்ரைரா.

இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் புனே அணி 1-0 என முன்னிலை வகித்தது.

கொல்கத்தா அணி தனக்கான முதல் கோல் வாய்ப்பை நெருங்கும் முன்னரே, புனே அணி இரண்டாவது கோல் அடித்து கொல்கத்தாவை திணறடித்தது.

இந்த ஆட்டத்தின் 56-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் புனே வீரர் ரோட்ரிகஸ், அணியின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார்.

இறுதியாக, ஆட்டத்தின் 69-ஆவது நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் அந்த அணியின் இயான் ஹியுமே.

இறுதி வரை கொல்கத்தா அணிக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், புனே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?