புரோ கபடி அப்டேட்: 35-21 கணக்கில் புணேவை பங்கமாக வீழ்த்தியது குஜராத்…

Asianet News Tamil  
Published : Aug 23, 2017, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
புரோ கபடி அப்டேட்: 35-21 கணக்கில் புணேவை பங்கமாக வீழ்த்தியது குஜராத்…

சுருக்கம்

Pro kabaddi update 35-21 account of Gujarat defeated pune

புரோ கபடி போட்டியின் 40-வது ஆட்டத்தில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டான் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

புரோ கபடி போட்டியின் 40-வது ஆட்டம் லக்னெளவில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் 10 நிமிடத்தில் இரு அணி கேப்டன்களுமே புள்ளிகளை சேகரித்த நிலையில், தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன், ரைடிலும் சிறப்பாக செயல்பட்ட குஜராத் அணி, முதல் பாதியில் 16-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் குஜராத்தின் கை ஓங்கியே இருந்ததால், இறுதியில் அந்த அணி 35-21 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் சுகேஷ் ஹெக்டே, 4 புள்ளிகள் எடுத்தார். தடுப்பாட்டக்காரரான ஃபாஸல் அட்ராச்சலி 9 டேக்கிள் புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்தார்.

புணேரி தரப்பில், ரைடர் தீபக் ஹூடா 5 புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் சந்தீப் நர்வால் 4 புள்ளிகளையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்தனர்.

குஜராத் வீரர் ரோஹித் குலியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 13 ரைடு புள்ளிகள், 17 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி ஆகியவற்றை பெற்றது. புணேரி அணி, 11 ரைடு புள்ளிகள், 10 டேக்கிளி புள்ளிகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒன்பது ஆட்டங்களில் மோதியுள்ள குஜராத் 6 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்ததுடன் ஒரு ஆட்டத்தை சமன் செய்து ஏ பிரிவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

புணேரி அணி ஐந்து ஆட்டங்களில் மோதி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ பிரிவின் 2-வது இடத்தில் உள்ளது என்பது கொசுறு தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்