
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 65-வது ஆட்டம் புணேரி பால்டன் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் இடையே கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய புணே அணி, முதல் பாதியில் 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் தெலுகு அணி புள்ளிகள் இடைவெளியை குறைக்க முடிந்த போதிலும், தோல்வியை தவிர்க்க முடியாமல் 37-42 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தது.
இதில் புணே அணி 18 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
தெலுங்கு அணி 20 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
புணே தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் தீபக் ஹூடா 20 ரைடுகள் சென்று 9 புள்ளிகள் பெற்றார். அணியின் பின்கள வீரர் கிரீஷ் மாருதி 6 டேக்கிள் புள்ளிகளை கைப்பற்றினார்.
தெலுங்கு தரப்பில் கேப்டன் ராகுல் செளதரி அதிகபட்சமாக 19 ரைடுகளில் 9 புள்ளிகளை கைப்பற்றினார். பின்கள வீரர் சோம்பீர் 4 புள்ளிகளை வென்றார்.
இந்த ஆட்டத்தில் புணே அணி தடுப்பாட்டத்தின் மூலம் புள்ளிகளை அதிகம் சேகரிக்க, தெலுங்கு அணி ரைடு மூலம் அதிக புள்ளிகள் பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.