
புரோ கபடி லீக் போட்டியின் முதல் தகுதிச்சுற்றில் குஜராத் ஃபார்சூன் ஜெயன்ட்ஸ் அணி 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை தோற்கடித்து முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளாது.
புரோ கபடி லீக் போட்டியின் முதல் தகுதிச்சுற்று மும்பையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் குஜராத் ரைடர் சச்சின் 9 ரைடு புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் பர்வேஷ் 4 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றனர்.
பெங்கால் அணியில் தீபக் நர்வால் 5 ரைடு புள்ளிகளையும், தடுப்பாட்டக்காரர் ஸ்ரீகாந்த் 4 டேக்கிள் புள்ளிகளையும் வென்றனர்.
குஜராத் அணி மொத்தமாக 21 ரைடு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் ஔட் புள்ளிகள், ஒரு கூடுதல் புள்ளி பெற்றது.
பெங்கால் அணி 8 ரைடு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி முதல் பாதி நிறைவில் 13-10 என முன்னிலை பெற்றது குஜராத். பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தின் இறுதியிலும் 42-17 புள்ளிகளில் முன்னிலைப் பெற்று வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.