பிரிய மனமில்லாமல் 2 கோடி கொடுத்து வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா! பந்தா காட்டும் பஞ்சாப்...

Asianet News Tamil  
Published : Jan 27, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பிரிய மனமில்லாமல் 2 கோடி கொடுத்து வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா! பந்தா காட்டும் பஞ்சாப்...

சுருக்கம்

Yuvraj Singh Returns

ஐபிஎல் சீசன் தொடங்கி தொடர்ந்து ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியில் இருந்து வந்தார். அதன் பிறகு பல சீசனில் வெவ்வேறு அணியில் ஆடினார். இந்நிலையில் பதினோராவது சீசனில் மீண்டும் யுவராஜை எடுத்துள்ளார்.

ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது. 11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட ஓவர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறாத கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையிலே ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏலம் நடைபெற்ற போது யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் சாதனையானது.  உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற அவரை இப்போது நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையான ரூ. 2 கோடியில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் எடுத்துள்ளார். 

யுவராஜ் சிங்கை எந்தஒரு அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதேபோல கவுதம் காம்பீர் நிலையும் கொல்கத்தா அணியில் அவர் இடம்பெறவில்லை. டெல்லி அணி அவரை ரூ. 2.80 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. பஞ்சாப் அணி அவரை ரூ. 2.60 கோடி வரையில் போட்டி ஏலம் கேட்டது. அதன்பின்னர் நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து அவர் டெல்லி அணிக்கு மீண்டும் திரும்பிஉள்ளார். 

யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்கு திரும்பியது தொடர்பாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார் அதில் , ஆம்! யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்கு திரும்பிஉள்ளார், இதைவிட பெரிய மகிழ்ச்சி கிடையாது என கூறிஉள்ளார். 

பஞ்சாப்

அக்சர் படேல் Retained ₹ 12.50 Cr ஆல் ரவுண்டர்

கே எல் ராகுல் ₹ 2.00 Cr ₹ 11.00 Cr பேட்ஸ்மேன்

ரவிசந்திரன் அஸ்வின் ₹ 2.00 Cr ₹ 7.60 Cr ஆல் ரவுண்டர்

ஆரோன் பின்ச் ₹ 1.50 Cr ₹ 6.20 Cr பேட்ஸ்மேன்

மார்கஸ் ஸ்டோனிஸ் ₹ 2.00 Cr ₹ 6.20 Cr ஆல் ரவுண்டர்

கருண் நாயர் ₹ 50.00 Lac ₹ 5.60 Cr பேட்ஸ்மேன்

டேவிட் மில்லர் ₹ 1.50 Cr ₹ 3.00 Cr பேட்ஸ்மேன்

யுவராஜ் சிங் 2.00 Cr 2.00 Cr ஆல் ரவுண்டர்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை தொடர்.. இந்தியாவை முந்தும் பாகிஸ்தான்..! ஆதிக்கம் செலுத்தும் பாக். ஸ்பின்னர்கள்
SKY செய்த 'அந்த' 3 மெகா தவறு.. மரண அடி வாங்கிய இந்தியா.. செமி பைனல் சான்ஸ் இருக்கா? முழு அலசல்!