மும்பை இந்தியன்ஸ் வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு! முழு விவரம்!

Published : May 03, 2025, 11:25 AM IST
மும்பை இந்தியன்ஸ் வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு! முழு விவரம்!

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர் ஷிவாலிக் சர்மா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Paliyal vankodumai case against former Mumbai Indians Shivalik Sharma: குஜராத் மாநிலம் வதோராவை சேர்ந்தவர் ஷிவாலிக் சர்மா. கிரிக்கெட் வீரரான இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷிவாலிக் சர்மா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள குடி பகட்சுனி காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு 

இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவி காவல் ஆணையர் (ஏசிபி) ஆனந்த் சிங் வெளிப்படுத்திய விவரங்களின்படி, புகார் அளித்த பெண் செக்டார் 2 இல் வசிப்பவர், மேலும் அவர் ஷிவாலிக் சர்மா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் ஷிவாலிக் சர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர்  ஷிவாலிக் சர்மா

புகார் அளித்தது தெரிந்ததும் தலைமைறைவான ஷிவாலிக் சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்தனர். ஷிவாலிக் சர்மா உள்நாட்டு கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கைகளைப் பதிவுசெய்து, ஐபிசி பிரிவு 180 இன் கீழ் நீதிமன்றத்தில் புகார்தாரரின் சட்டப்பூர்வ அறிக்கையைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை போலீசார் வெளியிட்டனர். 

எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

போலீஸ் எஃப்ஐஆரின்படி, கிரிக்கெட் வீரர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, நிச்சயதார்த்தம் செய்து, தன்னுடன் உடல் ரீதியாக உறவு  கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண் பிப்ரவரி 2023 இல் குஜராத்தின் வதோதராவுக்குச் சென்று அங்கு ஷிவாலிக்கை சந்தித்ததாக போலீஸ் எஃப்ஐஆர் கூறுகிறது. கிரிக்கெட் வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செயப்பட்ட சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?