இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சக வீரரை செவிட்டில் அறைந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்!!

Published : Oct 23, 2018, 02:34 PM IST
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சக வீரரை செவிட்டில் அறைந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்!!

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஒஷேன் தாமஸ், தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியதும் அளவற்ற களிப்பில் செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.   

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஒஷேன் தாமஸ், தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியதும் அளவற்ற களிப்பில் செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அபார சதத்தால் 323 ரன்கள் என்ற இலக்கை 42 ஓவரிலேயே எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் ஷிகர் தவானின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அந்த விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் ஒஷேன் தாமஸ் வீழ்த்தினார். தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் தாமஸ். தனது மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக சக வீரர்களுடன் கொண்டாடினார். 

அப்போது விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்புடன் கைகளை ஆக்ரோஷமாக தட்டும்போது, தாமஸின் கை ஹோப்பின் கன்னத்தில் பட்டது. அந்த் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து