நார்த் ஈஸ்டை வீழ்த்தியது கோவா…

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 02:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
நார்த் ஈஸ்டை வீழ்த்தியது கோவா…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை தோற்கடித்தது.

கோவாவின் ஃபட்ரோடா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி கோல் அடித்தது. 18 யார்ட் பாக்ஸில் இருந்து சேத்தியாசென் உதைத்த பந்து கோவா வீரர் மீது பட்டு கோலானாது.

இதையடுத்து அபாரமாக ஆடிய கோவா 62-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை பெர்னாண்டஸ் கொடுத்த கிராஸில் ராபின் சிங் அடித்தார். 72-ஆவது நிமிடத்தில் கோவா வீரர் சகில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும் விடாப்பிடியாகப் போராடிய கோவா அணி 90-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை பெர்னாண்டஸ் அடித்தார். இதன்மூலம் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. கோவா அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றபோதிலும், புள்ளிகள் பட்டியலில் எந்த முன்னேற்றமும் இல்லை. 10 புள்ளிகளுடன் கடைசி இடத்திலேயே உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி