மெக்ராத் அளவுக்கு யாராலும் ஆப் ஸ்டெம்பை குறிவைத்து துல்லியமாக பந்துவீச முடியாது – ராகுல் டிராவிட்

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
மெக்ராத் அளவுக்கு யாராலும் ஆப் ஸ்டெம்பை குறிவைத்து துல்லியமாக பந்துவீச முடியாது – ராகுல் டிராவிட்

சுருக்கம்

மெக்ராத் அளவுக்கு யாராலும் ஆப் ஸ்டெம்பை குறிவைத்து துல்லியமாக பந்துவீச முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராகுல் டிராவிட் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

“எனது தலைமுறையில் ஆஸ்திரேலியாவே தலைசிறந்த அணி. நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மெக்ராத்தே தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் சாதுர்யமான பௌலர்.

எனது அறிவுக்கு எட்டியவரையில் மெக்ராத் அளவுக்கு வேறு யாராலும் ஆப் ஸ்டெம்பை குறி வைத்து துல்லியமாக பந்துவீச முடியாது. அவர் மிகுந்த போராட்டக் குணம் கொண்டவர். அவர் நாம் ரன் எடுப்பதற்கான வாய்ப்பை எப்போதுமே வழங்கமாட்டார்.

காலையிலோ அல்லது மதியத்துக்குப் பிறகோ, எப்போது பந்துவீசினாலும், பேட்ஸ் மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் துல்லியமாக பந்துவீசுவார் மெக்ராத்.

சிலருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளும்போது இந்த ஓவரில் எப்படி ரன் எடுப்பது, உதிரிகள் மூலம் ஏதாவது ரன் கிடைக்குமா என சிந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட பந்துவீச்சாளர்களில் மெக்ராத்தும் ஒருவர். அவர் எப்போதுமே மிகத்துல்லியமாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசக் கூடியவர். அவருடைய பந்துவீச்சில் நல்ல வேகம் இருக்கும். அவர் வீசும் பந்துகள் நன்றாக எகிறும்” என்றார்.

164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 13,288 ரன்கள் குவித்துள்ளார். அவர் விளையாடிய காலங்களில் ஆஸ்திரேலியா வலுவான பெüலர்களை கொண்டு இருந்தாலும், அந்த அணிக்கு எதிராகவே அதிக ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

250 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?