எங்க இடத்துக்கே வந்து எங்களுக்கு பாடம் கத்து கொடுத்துட்டாங்க!! எதிரணியை தாறுமாறா புகழ்றதுக்கும் ஒரு மனசு வேணும்

By karthikeyan VFirst Published Feb 3, 2019, 4:47 PM IST
Highlights

18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 252 ரன்களை எட்டிய இந்திய அணி, அந்த இலக்கை எட்டவிடாமல் நியூசிலாந்து அணியை சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4-1 என தொடரை வென்றது. 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக ஆடி, படுதோல்வியடைந்தது. 

அந்த படுதோல்வியிலிருந்து ஒரு அணியாக மீண்டெழுந்து, கடைசி போட்டியில் மீண்டும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 252 ரன்களை எட்டிய இந்திய அணி, அந்த இலக்கை எட்டவிடாமல் நியூசிலாந்து அணியை சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை சுருட்டியிருக்க வேண்டிய ஸ்கோரை விட கொஞ்சம் அதிகமாக கொடுத்துவிட்டோம். ராயுடு அடித்த 90 ரன்கள் ரொம்ப முக்கியமானது. இந்திய பவுலர்கள் எவ்வளவு துல்லியமாக வீசுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நானும் லதாமும் அமைத்த பார்ட்னர்ஷிப் போல மற்றொரு பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை இழந்தோம். இலக்கு எட்டக்கூடியதாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு வழிவகுத்துவிட்டது. இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்திய அணி அதிக நெருக்கடி கொடுத்தது. எங்கள் மண்ணில் எங்களுக்கு நல்ல பாடம் புகட்டியிருக்கிறது இந்திய அணி என்று வில்லியம்சன் தெரிவித்தார்.
 

click me!