
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் ஆடவர் மற்றும் மகளிருக்கான பிரிவுகளில் தமிழகம் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் ஆடவர் பிரிவில் 'தகுதி-1'-இன் 'பி' பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 113-58 என்ற புள்ளிகள் கணக்கில் அரியாணாவை வென்றது. அதிகபட்சமாக தமிழகத்தின் ஜஸ்டின் 22 புள்ளிகள், அரியாணாவின் அங்கித் 18 புள்ளிகள் எடுத்தனர்.
அதேபோல, பஞ்சாப் 76-65 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பஞ்சாப் வீரர் குர்வீந்தர் சிங், குஜராத் வீரர் ஹர்பால் அதிக புள்ளிகள் எடுத்தனர்.
மற்றொரு பிரிவான 'ஏ' பிரிவு ஆட்டத்தில் உத்தரகண்ட் 85-62 என்ற கணக்கில் ஒடிஸாவை வென்றது. உத்தரகண்ட் வீரர் மோஹித் பந்தாரி, ஒடிஸா வீரர் சுமன் சாஹு அதிக புள்ளிகளை கைப்பற்றினர்.
அதேபோல ஆந்திர பிரதேசம் 76-75 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரையும், புதுச்சேரி 54-22 என்ற கணக்கில் தெலங்கானாவையும், சத்தீஸ்கர் 49-32 என்ற கணக்கில் கோவாவையும், உத்தரப் பிரதேசம் 88-76 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தையும் வென்றன.
இந்தப் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம் 68-48 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய பிரதேசத்தை வென்றது.
அதேபோல, ராஜஸ்தான் 89-61 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவையும், இந்தியன் இரயில்வே 89-39 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.