mithali raj: tamil:தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை: மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகள் ஆண்ட தமிழச்சி மிதாலி ராஜ்

Published : Jun 09, 2022, 07:38 AM IST
mithali raj: tamil:தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை: மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகள் ஆண்ட தமிழச்சி மிதாலி ராஜ்

சுருக்கம்

mithali raj: tamil nadu: மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்து, காலத்தால் நிரப்ப முடியாத தனக்கே உரிய இடத்தை விட்டு ர் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் விடைபெற்றுள்ளார்

மகளிர் கிரிக்கெட்டை 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்து, காலத்தால் நிரப்ப முடியாத தனக்கே உரிய இடத்தை விட்டு ர் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் விடைபெற்றுள்ளார்

மகளிர் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் புரிந்த மிதாலி ராஜ் ஒரு தமிழச்சி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஒருமுறை நடந்த சர்ச்சையில்தான் மிதாலி ராஜ் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதே வெளியுலகிற்கு தெரிந்தது. மிதாலி ராஜின் தந்தை துரைராஜ் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் விமானப்படையில் பணியாற்றி வருகிறார். தாய் லீலாராஜ். மிதாலி ராஜ் ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்து வளர்ந்தாலும் பாரம்பரியதமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2019ம் ஆண்டு ட்விட்டரில் ஒரு சர்ச்சை எழுந்தது. அதில், மிதாலி ராஜ் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இந்தி, தெலுங்கு, ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்கிறார். தமிழைப் புறக்கணிக்கிறாரா அல்லது தெரியவில்லையா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு மிதாலி ராஜி ட்விட்டரில் தமிழிலேயே பதில் அளித்திருந்தார். அதில் “ தமிழ் எனது தாய் மொழி. நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்குப் பெருமை. அனைத்தையும் கடந்து இந்தியராக இருப்பதுபெருமை”என ரசிகர் ஒருவருக்கு விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டந்த 1999ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் மிதாலி ராஜ் அறிமுகமாகினார். மிதாலி ராஜ் அறிமுகமாகும்போது அவருக்கு 16வயது 205 நாட்களாகி இருந்தது. 

முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த மிதாலிராஜ், முதல் விக்கெட்டுக்கு ரேஷ்மா காந்தி(104நாட்அவுட்)உடன் சேர்ந்து 258 ரன்கள் குவித்தார். மிதாலி ராஜ் சதம் அடித்து 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 26 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையையும் மிதாலிராஜ், ரேஷ்மா காந்தி ஜோடி முறியடித்தனர். அதுமட்டுமல்லாமல் இளம்வயதில் சதம் அடித்தவீராங்கனை என்ற பெருமையையும் மிதாலி ராஜ் பெற்றார். மிதாலி ராஜின் சாதனையை 21 ஆண்டுகளுக்குப்பின், அயர்லாந்து வீராங்கனை ஆர்மி ஹன்டர் தனது 16-வயது பிறந்தநாளில் சதம் அடித்து முறியடித்தார். 

2022ம் ஆண்டு ஜனவரியில் லக்னோவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிதாலி ராஜ் அறிமுகமாகினார். ஒருநாள் போட்டி போல் அல்லாமல் மிதாலி ராஜுக்கு மறக்கமுடியாததாக அமைந்தது. ஆம், முதல்போட்டியில் டக்அவுட்டில் மிதாலி ராஜ் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஆனால், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய மகளிர் அணி சென்றிருந்தது. இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் 214 ரன்கள் அடித்து மகளி்ர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் சேர்த்த வீராங்கனை என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்தார். இதற்கு முன் காரேன் கோல்டன் 209 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதாலி ராஜ் டி20 போட்டியில் கேப்டனாக அறிமுகப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்கினார். டி20 போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு முதல் போட்டியாக அமைந்த அந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் 28 ரன்கள் சேர்த்தார். இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2008ம் ஆண்டு மே மாதம் மிதாலி ராஜ் தலைமையிலா களமிறங்கிய இந்திய மகளிர் அணி இலங்கைக்கு எதிராக 177 ரன்கள்வித்தியாசத்தில் வென்று, தொடர்ந்து 4-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று கொடுத்தார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி