பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் பளுதூக்குதலில் இந்தியா சார்பில் போட்டியிடும் ஒரே ஒரு வீராங்கனை மீராபாய் சானு. இவர், இந்திய நாட்டிற்காக தங்கப் பதக்கம் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தமாக 32 விளையாட்டு போட்டிகளில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 10,714 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தமாக 16 விளையாட்டு போட்டிகளில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில், வில்வித்தை, தடகளம், பளுதூக்குல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஃபீல்டு ஹாக்கி, ஜூடோ, ரோயிங், நீச்சல், மராத்தான், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கோல்ஃப், குதிரையேற்றம் என்று மொத்தமாக 16 விளையாட்டுகளில் இந்திய விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்களி, நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, சாய்கோம் மீராபாய் சானு, தீரஜ் பொம்மதேவராஜ், தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ், அங்கிதா பகத், தீபிகா குமாரி, ஜோதி யாராஜி, கிரண் பஹல், பருல் சவுத்ரி என்று மொத்தமாக 117 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் ஒரேயொரு வீராங்கனை மட்டுமே பங்கேற்கிறார். அவர் தான் சாய்கோம் மீராபாய் சானு. வரும், ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் நடைபெறும் 10 நிகழ்வுகளுக்காக 57 நாடுகளிலிருந்து மொத்தமாக 122 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் போட்டி போடுகின்றனர்.
இதில் பெண்களுக்கான 49 கிலோ, 59 கிலோ, 71 கிலோ, 81 கிலோ மற்றும் 81 கிலோவிற்கும் அதிகமான பிரிவுகளில் மீராபாய் சானு போட்டியிடுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பளுதூக்குதலில் போட்டியிட்ட மீராபாய் சானு 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்தார். அந்த தொடரில் இந்தியா நாட்டிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். ஆனால், அதன் பிறகு பல காயங்கள் அடைந்த மீராபாய் சானு தற்போது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடபான மீராபாய் சானு கூறியிருப்பதாவது: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு நான் அடைந்த காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பயிற்சியாளர் விஜய் சர்மா தான். அவர் என்னை தனது மகளைப் போன்று பார்த்துக் கொண்டார். கடந்த ஒலிம்பிக்கில் நான் தவறவிட்டதை இந்த ஒலிம்பிக்கில் அடைந்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உள்பட மொத்தமாக 7 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், இந்த முறை அதை விட அதிகமாகவே இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.