இப்படிலாம் ஆடுனா இந்தியாவை ஒரு காலத்துலயும் ஜெயிக்கவே முடியாது!! ஆஸ்திரேலிய அணியை தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Nov 29, 2018, 9:57 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்லெட்ஜிங் தான். எதிரணி வீரர்களை சீண்டுவது, வம்பிழுப்பது, கிண்டலடிப்பது ஆகியவற்றிற்கு பெயர் போனவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். 

ஸ்லெட்ஜிங் செய்யாமல் ஒழுக்கமான கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அணியின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிகளை முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கடுமையாக சாடியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்லெட்ஜிங் தான். எதிரணி வீரர்களை சீண்டுவது, வம்பிழுப்பது, கிண்டலடிப்பது ஆகியவற்றிற்கு பெயர் போனவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். ஸ்லெட்ஜிங்கை வெற்றிக்கான உத்தியாகவே கையாண்டவர்கள், பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு அடக்கி வாசிக்கின்றனர். 

தென்னாப்பிரிக்காவில் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அதற்கு மூளையாக இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் உட்பட இவர்கள் மூவருமே தடையில் உள்ளனர். இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அணியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரும் புயலை கிளப்பியதை அடுத்து, புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் கீழ் அந்த அணி ஒழுக்கக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுத்து அதன்படி செயல்பட்டுவருகிறது. 

ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியின் கீழ் டிம் பெய்னின் கேப்டன்சியில் செயல்பட்டுவரும் ஆஸ்திரேலிய அணி, முன்புபோல் எதிரணியிடம் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. தங்கள் அணியின் மீதான பார்வையை மாற்றும் முயற்சியில் செயல்பட்டுவருகிறது. 

வலுவான மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட் தங்களை மற்றவர்கள் விரும்பவேண்டும் என்ற கவலையை விட்டுவிட வேண்டும். மாறாக நம் அணியை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற கவலையே அவர்களுக்கு இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் கடினமான முறையில் ஆடுவதுதான் ஆஸ்திரேலிய அணியின் உண்மையான பாணி. அதுதான் நம் ரத்தத்தில் கலந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவின் பாணியிலிருந்து விலகினால் மற்ற அணிகளுக்கு நம்மை பிடிக்கும். ஆனால் நம்மால் எதையுமே ஜெயிக்கமுடியாது. போட்டியை ஜெயிக்க முடியாது. போட்டியில் வெல்வதே முக்கியம் என கடுமையாக சாடியுள்ளார் கிளார்க். 
 

click me!