
2025 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. 2025 நவம்பர் 8 முதல் 17 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 16 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 373 வீரர்கள் வரை பங்கேற்றனர். இதில் கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் அடங்குவர்.மலேசிய சதுரங்க சம்மேளனம் இப்போட்டியை நடத்துகிறது.
இதில், சென்னை கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரின் மகள் அஸ்வினிகா, மலேசியாவின் கோலாலம்பூரில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 2025 ஆம் ஆண்டு காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆர்.அஸ்வினிகா மணி, நுங்கம்பாக்கம், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய அஸ்வினிகாவை அவரது பள்ளி நிர்வாகம் வெகுவாக பாராட்டி வருகிறது. காவல் துறையில் உள்ள அதிகாரிகளும் காவல் ஆய்வாளர் ரத்தினகுமாருக்கும், அவரது மகள் அஸ்னிகாவுக்கும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.