
கிரிக்கெட்…கிரிக்கெட்…கிரிக்கெட் என்று கிரிக்கெட்டையே வாழ்க்கையாக கொண்டிருந்த என்னை ஒரு மனிதனாக மாற்றியவர் என மகள் ஜிவாதான் என மகேந்திர சிங் டோனி உருக்கத்துடன் தெரிவித்தார். அதே நேரத்தில் தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பதும் அவர்தான் எனவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி பல சாதனைகள் படைத்துள்ளார். அதில் மிக முக்கியமானது அவர் வென்ற மூன்று ஐசிசி கோப்பைகள்.. இதுதவிர அவர் தனது பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப் திறமைகளால் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் டோனி தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தார்..
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற , டோனி கிரிக்கெட்டையே தனது வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார் என கூறியுள்ளார்.
ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன். ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக நெருக்கமாக இருப்பது இயல்புதான். அதே போன்று தான் என் மகளும் உள்ளார்.
ஆனால் ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தார். போட்டிக்கு முன்னும், பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி கோரினேன். மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழைந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்தார்.
தற்போது தன்னுடைய தொடர் வெற்றிக்கு காரணமும் மகள் ஜிவாதான் என கூறிய டோனி, என்னை மனிதனாக மாற்றிய என மகளுக்கு நன்றி என உருக்கத்துடன் தெரிவித்தார்..
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.