பிரபல WWE வீரர் 'ரே மிஸ்டீரியோ சீனியர்' திடீர் மரணம்; ரசிகர்கள் ஷாக்; யார் இவர்?

Published : Dec 21, 2024, 11:20 AM ISTUpdated : Dec 21, 2024, 12:23 PM IST
பிரபல WWE வீரர் 'ரே மிஸ்டீரியோ சீனியர்' திடீர் மரணம்; ரசிகர்கள் ஷாக்; யார் இவர்?

சுருக்கம்

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் திடீரென மரணம் அடைந்துள்ளார். இவரது மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ரே மிஸ்டீரியோ சீனியர் மரணம் 

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு இருப்பதுபோல் WWE எனப்படும் மல்யுத்த போட்டிகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 90 கிட்ஸ்களின் மனதில் குடிகொண்ட WWE மல்யுத்த வீரரான ரே மிஸ்டீரியோ சீனியர் (Rey Mysterio Sr) உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

66 வயதான ரே மிஸ்டீரியோ சீனியர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவரது இறப்புக்கான முழுமையான காரணம் வெளிவரவில்லை. மெக்சிகோவை சேர்ந்த ரே மிஸ்டீரியோ சீனியரின் இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் ஆகும். 1976ம் ஆண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக WWE மல்யுத்த போட்டிகளில் கலக்கிய ரே மிஸ்டீரியோ சீனியர் கடந்த 2009ம் ஆண்டு தொழில் முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

90 கிட்ஸ்களின் 'அங்கிள்'

ரே மிஸ்டீரியோ சீனியர் மல்யுத்த உலகில் நுழைவதற்கு முன்பு, குத்துச்சண்டை வீரராக பயிற்சி பெற்றார். ஆனாலும் குத்துசண்டை பயிற்சியாளர்களின் தூண்டுதல், உத்வேகம் காரணமாக WWE மல்யுத்த போட்டிகளுக்கு திரும்பினார்.  உலக மல்யுத்த சங்கம் நடத்திய பல்வேறு போட்டிகள் மற்றும் Lucha Libre AAA  போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். 

முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சுழன்று சென்று எதிராளியை புரட்டியெடுக்கும் ரே மிஸ்டீரியோ சீனியரை 'அங்கிள்' என ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர். எதிராளிகளின் முகத்தில் உதைக்கும் தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலமாக தனக்கென்று உலகமெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ரே மிஸ்டீரியோ.

அந்தரத்தில் பறந்து தாக்குதல் 

கயிற்றின் மேலிருந்து அந்தரத்தில் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்ர ரே மிஸ்டீரியோ சீனியர், பிரபல மல்யுத்த வீரர்கள் தி அண்டர்டேக்கர், ஜான் செனா, தி ராக் ஆகியோரை போன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்படி மல்யுத்த போட்டிகளில் கலக்கிய ரே மிஸ்டீரியோவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ரே மிஸ்டீரியோ சீனியரின் சகோதரர்  ராபர்டோ குட்டெரெஸ் ஒரு வாரத்துக்கு முன்புதான் இறந்து போனார். தற்போது ரே மிஸ்டீரியோ சீனியரும் திடீரென உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ரே மிஸ்டீரியோ சீனியர் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!