அவங்க 2 பேரை மட்டுமே நம்பி இருக்குறது நல்லது இல்ல!! உலக கோப்பைக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Dec 15, 2018, 2:38 PM IST
Highlights

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்னெப்போதையும் விட சிறப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன். 
 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்னெப்போதையும் விட சிறப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன். 

இந்திய அணி அனைத்து காலக்கட்டத்திலுமே மிகச்சிறந்த பேட்டிங் அணியாகவே இருந்திருக்கிறது. உலகின் தலைசிறந்த தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர்கள், ஸ்பின்னர்கள் ஆகியோரை பெற்றிருந்த இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் பெரியளவில் சிறந்தவர்களாக இல்லை. 

எதிரணியை அச்சுறுத்தும் விதமான வேகப்பந்து வீச்சு யூனிட்டாக இந்திய அணி திகழ்ந்ததில்லை. கபில் தேவ், ஸ்ரீநாத், ஜாகீர் கான் என ஒரு சிலரே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்தனர். 

ஆனால் தற்போதைய இந்திய அணி, மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றிருக்கிறது. பும்ரா, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி என டெஸ்ட் போட்டிகளில் இந்திய பவுலர்கள் மிரட்டி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்திய அணி தோற்றாலும், அனைத்து போட்டிகளிலும் வெற்றிக்கு மிக அருகில் சென்றே தோல்வியை தழுவியது. அதற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தான் காரணம். 

இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவையே அதிகமாக சார்ந்திருக்கிறது. உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இவர்கள் இருவரை மட்டுமே சார்ந்திருப்பது நல்லதல்ல. இருவரில் ஒருவர் இல்லையென்றாலும் இந்திய அணி திணறுகிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமணன்,  நாம் மிகச்சிறந்த பேட்டிங் யூனிட்டை பெற்றிருக்கிறோம். ஆனால் பவுலிங்கில் என்னால் அப்படி கூறமுடியவில்லை. பவுலர்கள் அபாரமாக வீசுகின்றனர். சாஹல் மற்றும் குல்தீப் என இரண்டு சிறந்த ஸ்பின்னர்களை பெற்றிருக்கிறோம். ஆனால் வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரை மட்டுமே அதிகமாக சார்ந்திருக்கிறது இந்திய அணி. அவர்கள் இல்லாத தருணங்களில் இந்திய அணி தடுமாறுகிறது என லட்சுமணன் தெரிவித்துள்ளார். 
 

click me!