
இந்திய அணி ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டெஸ்ட், மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் ஆடுகிறது. இந்த போட்டிகளுக்கு தயாராகும் வகையில், ஜூன் மாதம் முழுவதும் கவுண்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக ஆட கோலி ஒப்பந்தமானார்.
சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கோலி திகழ்ந்தாலும், இங்கிலாந்தில் மோசமான ரெக்கார்டையே கோலி வைத்துள்ளார். எனவே இங்கிலாந்து தொடருக்கு முன்னதாகவே தயாராகும் நோக்கில் கவுண்டி போட்டிகளில் ஆட விரும்பிய கோலி, அதை எதிர்நோக்கி ஆர்மாகவும் இருந்தார்.
அதற்காக அடுத்த மாதம் ஆஃப்கானிஸ்தானுடன் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டியையும் புறக்கணித்திருந்தார். இந்நிலையில், கவுண்டி போட்டியில் கோலி ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் பெங்களூரு அணி வெளியேறியது.
கடந்த 17ம் தேதி நடந்த ஹைதராபாத்துக்கு எதிரான லீக் போட்டியின் போது, பெங்களூரு அணி கேப்டன் கோலி ஃபீல்டிங் செய்யும்போது கழுத்தில் காயம் ஏற்பட்டது. கோலியின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்தபின், அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, சிறப்பு சிகிச்சை நிபுணர் ஆய்வு ஆகியவற்றை முடித்தபின், அவரை கவுண்டி போட்டியில் ஆடவேண்டாம் என அறிவுறுத்தியது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கவுண்டி போட்டியில் ஆடமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கவுண்டி போட்டியில் ஆட கோலி மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது அதில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.