ஒரே போட்டியில் கோலிக்காக காத்திருக்கும் ஏராளமான சாதனைகள்!!

By karthikeyan VFirst Published Dec 25, 2018, 2:01 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து வருகிறார். 
 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து வருகிறார். 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்த ஆண்டு சரியாக அமையாவிட்டாலும் விராட் கோலிக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி, இங்கிலாந்திலும் அதிக ரன்களை குவித்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 25வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோலிக்காக நிறைய சாதனைகள் காத்திருக்கின்றன. கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்க்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மூன்றாவது போட்டியில் கோலிக்காக காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்:

1. ஓராண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார். 2002ம் ஆண்டு வெளிநாடுகளில் 1137 ரன்களை குவித்துள்ளார் ராகுல் டிராவிட். இந்த ஆண்டில் கோலி இதுவரை வெளிநாடுகளில் 1065 ரன்களை குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 82 ரன்கள் குவித்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கலாம். 

2. கோலி இந்த போட்டியில் 156 ரன்கள் குவித்தால் வெளிநாட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைக்கலாம். 2008ல் 1212 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தான் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 156 ரன்கள் அடித்தால் ஸ்மித்தின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார். 

3. மெல்போர்ன் டெஸ்டில் ஒரு சதம் அடித்தால் 26 சதங்களுடன் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸின் டெஸ்ட் சத சாதனையை சமன் செய்வார். ஒருவேளை இரண்டு சதமடித்துவிட்டால், 27 சதங்களுடன் ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை சமன் செய்வார். 

4. மெல்போர்ன் டெஸ்டில் கோலி சதமடித்தால், ஓராண்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்வார். 1998ம் ஆண்டு சச்சின் 12 சதங்களை விளாசினார். தற்போது கோலி இந்த ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் சதங்கள், 6 ஒருநாள் சதங்களுடன் 11 சதங்களை விளாசியுள்ளார். எனவே இன்னும் ஒரு சதமடித்தால் சச்சினை சமன் செய்துவிடுவார். 

5. ஒரு சதத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் கவாஸ்கருடன் அந்த இடத்தை கோலி பகிர்வார். இந்த பட்டியலில் 11 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 

6. அதேபோல ஒரு சதமடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதமடித்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைப்பார். 

click me!