கோலி எவ்வளவு கோபத்துல இருக்காருனு இந்த வீடியோவில் பாருங்க!! சும்மா தெறிக்கவிடுறாரு

Published : Dec 04, 2018, 03:27 PM IST
கோலி எவ்வளவு கோபத்துல இருக்காருனு இந்த வீடியோவில் பாருங்க!! சும்மா தெறிக்கவிடுறாரு

சுருக்கம்

இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கருதப்படும் விராட் கோலியை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவரை வம்பிழுப்பதற்கும் தயாராகிவருகிறது.   

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அனல் பறக்கப்போவது உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வம்பிழுக்க தயாராகிவரும் நிலையில், வலை பயிற்சியிலேயே வெறித்தனமாக வெளுத்து வாங்குகிறார் கோலி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. இந்நிலையில், முதல் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. 

அதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கருதப்படும் விராட் கோலியை வீழ்த்துவதற்கு வியூகங்களை வகுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவரை வம்பிழுப்பதற்கும் தயாராகிவருகிறது. 

இதற்கிடையே எதிரணி என்ன செய்தாலும் அதற்கு பேட்டிங்கில் தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி.

வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் பந்தை மிகவும் ஆக்ரோஷமாக தூக்கி அடித்தார். விராட் கோலியின் ஆட்டத்தில் ஒருவிதமான ஆக்ரோஷமும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் இருந்ததை உணரமுடிகிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து