
நாக்ஸ்வில்லே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முன்னேறியது.
நாக்ஸ்வில்லே சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நாக்ஸ்வில்லே நகரில் ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த டென்னிஸ் போட்டியில், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், அமெரிக்காவின் கெவின் கிங் - பிராட்லி கிலான் இணையை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பயஸ் - பூரவ் இணை வீழ்த்தியது.
இதன்மூலம், காலிறுதிக்கு முன்னேறிய இந்த இணை இன்று நடைபெறவுள்ள அந்த ஆட்டத்தில் பிரிட்டனின் எம்.வில்லிஸ் - எல்.பிராடி இணையை எதிர்கொள்கிறது.
பயஸ் - பூரவ் ஜோடி இணைந்து இதுவரை பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.