புனேயை வீழ்த்தி 5-வது வெற்றி அடைந்தது கேரளா…

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
புனேயை வீழ்த்தி 5-வது வெற்றி அடைந்தது கேரளா…

சுருக்கம்

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் புனேயை வீழ்த்தி, 5-வது வெற்றியை கேரளா பிடித்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 5-ஆவது வெற்றியைப் பெற்ற கேரள அணி 18 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.

கொச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 7-ஆவது நிமிடத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கியது கேரளம். வினீத் கொடுத்த "லாங் பாஸ்' மூலம் டக்கென்ஸ் நஸன் இந்த கோலை அடித்தார். இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய புனே அணி போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய கேரள அணி 57-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. வினீத் கொடுத்த கிராஸில் ஹியூஸ் இந்த கோலை அடித்தார். மறுமுனையில் கடுமையாகப் போராடிய புனே அணி கடைசி நிமிடத்தில் ரோட்ரிகஸ் மூலம் கோலடித்தது. எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள புனே அணி 15 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!