
வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இது குறித்து ஸ்ரீ சாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்க நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டியில், சூதாட்டம் நடைபெற்றதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஷர்மா, டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்களுடன் 3 இடைத்தரகர்கள் கைதாகியுள்ளனர்.
இதையடுத்து, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம், வாழ்நாள் தடை விதித்தது.
பிசிசிஐ-ன் தடையை எதிர்த்து ஸ்ரீ சாந்த் கேரள நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, ஸ்ரீ சாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க உத்தரவிட்டது.
இது குறித்து ஸ்ரீசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.