பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து கேப்டன் செய்த அபாரமான செயல்.. வீடியோ

Published : Nov 03, 2018, 04:31 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து கேப்டன் செய்த அபாரமான செயல்.. வீடியோ

சுருக்கம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்துள்ளார்.   

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

2வது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் இந்த முறையும் தொடக்க வீரர் கோலின் முன்ரோ தான் நன்றாக ஆடினார். முன்ரோவும் கோரி ஆண்டர்சனும் தலா 44 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது. 

154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹஃபீஸ், ஆசிஃப் அலி ஆகிய நான்கு பேரும் சம அளவிலான பங்களிப்பை அளித்ததால் அந்த அணி 19.4 ஓவரில் பெரிய சிரமம் இன்றி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸின்போது 5வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானின் கேட்ச்சை அருமையாக பிடித்தார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்த வில்லியம்சன், அவரிடமிருந்து விலகிச்சென்ற பந்தை அருமையாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

PREV
click me!

Recommended Stories

TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
IND vs SL: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்! கில் தலைமையில் களமிறங்கும் இளம் இந்திய அணி!