
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ மற்றும் கனடாவின் ராவ்னிக் மோதினர்.
இதில், 6–2, 6–3 என்ற நேர் செட்டில் மிலோஸ் ராவ்னிக்கை வெளியேற்றினார் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ.
இதன்மூலம் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது டெல் போட்ரோவின் 400–வது சர்வதேச வெற்றி.
மற்றொரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5–7, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் 49–ஆம் நிலை வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சை சாய்த்து இறுதிசுற்றை எட்டினார்.
இந்த ஆண்டில் பெடரர் பெற்ற 17–வது வெற்றி இதுவாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.