
இதுவரை இங்கிலாந்து வீராங்கனை அலிசனுடன் ஆறு முறை மோதிய இந்தியாவின் ஜோஷ்னா உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக அவரை வெற்றி கண்டார்.
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தின் எல் கெளனா நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா மற்றும் இங்கிலாந்தின் அலிசன்வாட்டர்ஸ் ஆகியோர் மோதினர்.
இந்தச் சுற்றில் ஜோஷ்னா 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் அலிசன் வாட்டர்ஸை தோற்கடித்தார்.
இதுவரை அலிசனுடன் ஆறு முறை மோதியுள்ள ஜோஷ்னா, இப்போது முதல் முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.
தனது விடாமுயற்சியால் ஆறு முறை தோற்றாலும் வெற்றி பெற்று இன்று வீர மங்கையாக திகழ்கிறார் ஹோஷ்னா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.