செப் பிளாட்டர் தாக்கல் செய்த மேல் முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரிப்பு…

 
Published : Dec 06, 2016, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
செப் பிளாட்டர் தாக்கல் செய்த மேல் முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரிப்பு…

சுருக்கம்

நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தன் மீதான 6 ஆண்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபிஃபா (சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் தாக்கல் செய்த மேல் முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து செப் பிளாட்டர் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்த முடிவை ஏற்பது கடினம் தான். இருப்பினும், கடந்த நாள்களில் வழக்கு விசாரணை நடைபெற்றதை வைத்துப் பார்க்கும்போது வேறு தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியாது.
ஃபிஃபாவில் எனது 41 ஆண்டுகால வாழ்க்கையில் அதிக அனுபவம் பெற்றுள்ளேன். ஒரு விளையாட்டில் வெல்வதும், தோற்பதும் இயல்பு என்பதை அறிந்துள்ளேன்.

கடந்த காலங்களில் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் கால்பந்து விளையாட்டு மற்றும் ஃபிஃபாவின் நலனுக்கானது என உணர்கிறேன் என்று செப் பிளாட்டர் கூறினார்.

சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பால், ஃபிஃபாவின் கெüரவத் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பையும் பிளாட்டர் இழந்துள்ளார். எனினும், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு செப் பிளாட்டருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

ஃபிஃபா தலைவராக செப் பிளாட்டர் இருந்தபோது, அதன் நிர்வாகிகளில் ஒருவரான மைக்கெல் பிளாட்டினிக்கு 20 லட்சம் டாலர்கள் நிதியை விதிமுறையை மீறிய வகையில் வழங்க ஒப்புதல் அளித்ததாக பிளாட்டருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையை அடுத்து, ஃபிஃபா நடவடிக்கைகளில் தலையிட அவருக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?
ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?