சர்வதேச குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்...

Asianet News Tamil  
Published : Feb 23, 2018, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சர்வதேச குத்துச்சண்டை: அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்...

சுருக்கம்

International boxing Mary Kom advanced to semis ...

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறி உள்ளார். 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடைபெறுகிறது. இதன் காலிறுதியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் ருமேனியாவின் ஸ்டெலுடா தத்தாவுடன் மோதினார்.

ஸ்டெலுடா தத்தாவுடன்  வீழ்த்தியதன்மூலம் மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலமாக அவர் சர்வதேச களத்தில் தொடர்ச்சியாக 3-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் இதுவரை, சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்), சவீதி பூரா (75 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ) ஆகியோர் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

இதில் சவீதி பூரா மற்றும் மீனா குமாரி தேவி ஆகியோர் காலிறுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில், சீமா பூனியா மற்றும் பாக்யவதி ஆகியோர் 'பை' வாய்ப்பு மூலமாக அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?