
போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை வாகைச் சூடியதன்மூலம் இந்த சீசனில் முதல் பட்டம் வென்ற இணை திவிஜ் சரண் - பூரவ் ராஜா ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர்.
போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை, மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் - நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக் இணையுடன் மோதியது.
இதில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை, மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் - நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக் இண் இணையை வெற்றிக் கண்டது.
வெற்றி குறித்து திவிஜ் சரண் பேசியது:
"இந்தத் தொடர் சவால் மிக்கது. ஏனெனில் இங்கு பயஸ் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தியே சாம்பியன் ஆகியிருக்கிறோம். களிமண் தரையில் நாங்கள் பெற்ற முதல் வெற்றி இது. பிரெஞ்சு ஓபனில் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தை இந்த வெற்றி எங்களுக்கு கொடுக்கும்' என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.