முதலிடத்தை தக்க வைத்தது இந்திய அணி; கடாயுத கோப்பை வழங்கி கௌரவிப்பு…

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 02:06 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
முதலிடத்தை தக்க வைத்தது இந்திய அணி; கடாயுத கோப்பை வழங்கி கௌரவிப்பு…

சுருக்கம்

இந்தூர் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. இந்த தொடருக்கு முன்பாக 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை முழுமையாக வென்றதன் மூலம் 115 புள்ளிகளுடன் நம்பர் ஒன் அரியணையில் கம்பீரமாக ஏறி இருக்கிறது. நியூசிலாந்து அணி இந்த தொடரை தோற்றதால் 4 புள்ளிகளை இழந்தாலும், 7-வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தை பிடித்த இந்திய அணிக்கு நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் அணிக்கு வழங்கப்படும் கௌரவமிக்க கடாயுதம் உடனடியாக வழங்கப்பட்டது. இந்தூரில் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்த கடாயுதத்தை ஐ.சி.சி. சார்பில் கவாஸ்கர் வழங்கினார். அதனை கேப்டன் விராட்கோலி பெற்றுக்கொண்டார். டோனிக்கு பிறகு கடாயுதத்தை பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்ற விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த முறை நாங்கள் இந்த கடாயுதத்தை பெற்ற போது நான் ஒரு வீரராக அதை பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது கேப்டனாக அதனை கையில் ஏந்தி உள்ளேன். இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதுவும் தொடரை வென்றதோடு, நம்பர் ஒன் அணியாகவும் வலம் வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற்றம் காண முயற்சிப்போம். எஞ்சிய சீசனிலும் இதே போல் நன்றாக விளையாடுவோம்’ என்றார். புதிய டெஸ்ட் தர வரிசை வருமாறு:-

வரிசை நாடு புள்ளி

1. இந்தியா 115

2. பாகிஸ்தான் 111

3. ஆஸ்திரேலியா 108

4. இங்கிலாந்து 108

5. தென் ஆப்பிரிக்கா 96

6. இலங்கை 95

7. நியூசிலாந்து 91

8. வெஸ்ட் இண்டீஸ் 67

9. வங்காளதேசம் 57

10. ஜிம்பாப்வே 8 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்