நீங்க கிளம்புங்க.. நாங்க அவரை எடுத்துக்குறோம்!! சீனியர் வீரரை தூக்கிப்போட்டு இளம் வீரர் தேர்வு.. பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Oct 12, 2018, 9:55 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 

ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ராயுடு, தோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய ராயுடு அணியில் வாய்ப்பு பெற்றார். அதேநேரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நிதாஹஸ் டிராபியில் வாய்ப்பு பெற்று சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக், ஆசிய கோப்பையில் வாய்ப்பு பெற்றார். ஆனால் ஆசிய கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு தினேஷ் கார்த்திக் சோபிக்கவில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் நிலையில், மிடில் ஆர்டர் சிக்கலை தீர்ப்பதற்காக ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனீஷ் பாண்டேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆசிய கோப்பையிலும் சிறப்பாக ஆடிய ஜடேஜா, மீண்டும் ஒருநாள் அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். 

புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் மற்றும் இளம் இடது கை வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் உள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், அம்பாதி ராயுடு, மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கலீல் அகமது. 

click me!