
இந்திய கால்பந்து வீராங்கனை பூனம் செüஹான் (29) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவில் உயிரிழந்தார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய மகளிர் கால்பந்து அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அத்துடன், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கால்பந்து அணியிலும் அவர் பங்குவகித்தார்.
உத்தரப் பிரதேச மாநில கால்பந்து அணியின் முக்கிய வீராங்கனையாக அவர் கருதப்பட்டார்.
வராணசியில் உள்ள சிக்ரா விளையாட்டரங்கத்தில் பயிற்சியாளராக பூனம் பணியாற்றி வந்தார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.