பிக்பாஸில் கலந்துகொள்கிறார் சர்ச்சைக்கு பெயர்போன கிரிக்கெட் வீரர்!!

Published : Sep 06, 2018, 10:30 AM ISTUpdated : Sep 09, 2018, 07:26 PM IST
பிக்பாஸில் கலந்துகொள்கிறார் சர்ச்சைக்கு பெயர்போன கிரிக்கெட் வீரர்!!

சுருக்கம்

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் இந்திய அணியின் சர்ச்சைக்குரிய முன்னாள் வீரர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் இந்திய அணியின் சர்ச்சைக்குரிய முன்னாள் வீரர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைத்துறை பிரபலங்களை வைத்து நடத்தப்படும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. தமிழில் இரண்டாவது சீசன் நடந்துவருகிறது. 

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஸ்ரீசாந்த் தான் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது போன்ற பரபரப்புகளுக்கு சொந்தக்காரர்.

கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2013ம் ஆண்டு சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஆட வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. அதன்பிறகு அதிலிருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் ஆட அவர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஸ்ரீசாந்த், ஜாரீர் கான் நடித்த அக்சர்-2 என்ற பாலிவுட் படத்தில் நடிகராக அறிமுகமானார். 

நடிப்பு ஒருபுறமிருக்க, பாஜகவில் இணைந்த ஸ்ரீசாந்த், 2016ல் கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவ்வாறு கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டபிறகு சினிமா, அரசியல் என பலதுறைகளில் காலடி பதித்த ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். வரும் 16ம் தேதி தொடங்கும் 12வது இந்தி பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..