
லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு இந்திய அணி பறந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த ரோகித் சர்மாவுக்கு இந்தப் போட்டித் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவானுடன் அஜின்கிய ரஹானே விளையாடுவார் என்று இந்திய அணி கேப்டன் வீராட்கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்
வீராட்கோலி (கேப்டன்) ஷிகர் தவான், அஜின்கிய ரஹானே, யுவராஜ்சிங், மகேந்திரசிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, புவனேஷ்வர் குமார், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ்.
மேற்கு இந்திய தீவுகள் அணி விவரம்
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜோனத்தன் கார்டர், மிக்யூல் குமின்ஸ், அல்சாரி ஜோசப், ஜேசன் முகமது, கிரன் பவல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், தேவேந்திர பிசோ, ரோஸ்டன் சேஸ், சாய் ஹோப், இவின் லிவிஸ், ஆஸ்லி நர்ஸ், ரோமன் பவல்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.