
ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் கொன்சாம் ஊர்மிளா தேவி தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்குதல் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மகளிர் 44 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார் இந்தியாவின் ஊர்மிளா தேவி.
இதில், ஸ்னாட்ச் பிரிவில் 56 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 70 கிலோ என மொத்தம் 126 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.