புஜாரா, கோலி டக் அவுட்.. ரஹானே, ரோஹித்தும் காலி!! அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்த இந்திய வீரர்கள்.. கம்மின்ஸ் அபாரம்

By karthikeyan VFirst Published Dec 28, 2018, 12:14 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கம்மின்ஸின் வேகத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கம்மின்ஸின் வேகத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 443 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி பும்ராவிடம் சரணடைந்தது. 

வெறும் 67 ஓவர்கள் மட்டுமே ஆடி 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ராவின் வேகத்தில் வெறும் 151 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி சுருள, 292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 

வலுவான முன்னிலையுடன் தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார் கம்மின்ஸ். ஹனுமா விஹாரியை போன இன்னிங்ஸை போலவே ஒரு பவுன்ஸை போட்டு காலி செய்த கம்மின்ஸ், புஜாரா மற்றும் கோலியை டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

இவர்களை தொடர்ந்து ரஹானேவை ஒரு ரன்னில் வெளியேற்றினார். 28 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடந்த இன்னிங்ஸில் சதமடித்த புஜாரா, இந்த இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். கோலியோ இரண்டாவது பந்தில் டக் அவுட். ரஹானே முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து 2வது பந்திலேயே அவுட் என வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். 

4 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட இந்திய அணியில் ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் இணைந்து நிதானமாக ஆடிவந்த நிலையில், ரோஹித்தும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேசில்வுட்டின் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. 
 

click me!