மகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் நல்ல முன்னேற்றம்…

First Published Jul 26, 2017, 9:26 AM IST
Highlights
India Harmenpreet caur is very good rank at ICC rankings for women cricket


மகளிர் கிரிகெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கெளர் 6-வது இடத்திற்கு முன்னேரி அசத்தியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததால் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு அவர் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள 2-வது இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் என்ற பெருமையையும் அவார் பெற்றுள்ளார்.

இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் முதலிடத்திலும், அதே அணியின் எலிஸ் பெர்ரி 3-வது இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 86 ஓட்டங்கள் எடுத்த இந்தியாவின் பூனம் ரெளத் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மற்றொரு வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்டு, தனது தரவரிசையில் முதல் முறையாக 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில், ஒருநாள் போட்டியில் உலகில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனையான இந்தியாவின் ஜூலான் கோஸ்வாமி நான்கு இடங்கள் முன்னேறி, 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மற்றொரு இந்தியரான சிக்ஷா பாண்டே, ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தையும், பூனம் யாதவ் ஆறு இடங்கள் முன்னேறி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

tags
click me!