
தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் ஜெர்மனியிடம் வீழ்ந்த்ஹு இந்தியா வெள்ளி வென்றது.
தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் - சனில் ஷெட்டி இணை தொடக்கத்தில் ஜப்பானுடன் மோதியது.
இதில், 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அசத்தியது. பின்னர், மலேசியாவுடன் மோதி 3-0 என வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு இந்திய இணையான ஹர்மீத் தேசாய் - மானவ் தாக்கரை எதிர் கொண்டு 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினர்.
இறுதி சுற்றில் ஜெர்மனியின் டோபியாஸ் ஹிப்ளர் - கில்லான் ஓர்ட் இணையிடம் மோதி 11-9, 12-14, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது சத்யன்-சனில் ஷெட்டி இணை.
இந்த தோல்வியால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.