
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்டது. இதில், இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியைப் பொருத்த வரையில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதால் உத்வேகத்தோடு களமிறங்கும்.
அணியின் பேட்டிங்கிற்கு தவன், ரோஹித் கூட்டணி உள்ளது. மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, எம்.எஸ்.தோனி பலம் சேர்க்கின்றனர்.
அணியின் பந்துவீச்சை கணக்கில் கொண்டால் பூம்ரா, புவனேஸ்வர் வேகம் காட்டி மிரட்ட வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பலம் சேர்க்கின்றனர்.
நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்துவிட்டதால், டி-20 தொடரை தக்க வைக்க அந்த அணி கடுமையாக முயற்சிக்கும்.
கடந்த ஆட்டத்தில் முக்கியமான தருணங்களில் ரோஹித் மற்றும் கோலியின் கேட்சுகளை நியூஸிலாந்து ஃபீல்டர்கள் தவறவிட்டது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. இந்த முறை ஃபீல்டிங்கில் அந்த அணி கவனமுடன் இருக்கும். பந்துவீச்சில் சேன்ட்னர், செளதி, சோதி ஆகியோர் பலம் சேர்ப்பார்கள்.
இந்தியா அணியின் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பூம்ரா, யுவேந்திர சாஹல், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், மணீஷ் பாண்டே, , அக்ஸர் படேல், கே.எல்.ராகுல்.
நியூஸிலாந்து அணியின் விவரம்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்டில், மாட் ஹென்ரி, டாம் லதாம், டாட் ஆஸ்லே, டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், காலின் டி கிரான்ட்ஹோம், ஹென்ரி நிகோலஸ், ஆடம் மில்னே, காலின் மன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், ஐஷ் சோதி, டிம் செளதி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.