
நான் சரியாக விளையாடாவிட்டால், எனது இடத்தைப் பிடிக்க ஏராளமான வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
இலங்கையின் தம்புல்லாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதில் தவன் 90 பந்துகளில் 132 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஷிகர் தவன் கூறியது:
“2019 உலகக் கோப்பை போட்டி வரை இதேபோன்று சிறப்பாக விளையாட விரும்புகிறேன். அதுதான் எனது இலக்கும்கூட. ஏனெனில் நான் சரியாக விளையாடாவிட்டால், எனது இடத்தைப் பிடிக்க ஏராளமான திறமையான வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். தோல்விகள் எனக்கு நிறைய பாடம் கற்று தந்திருக்கிறது.
நான் சிறப்பாக விளையாடாத நேரத்தில் எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டினேன். நான் சிறப்பாக ஆடுகிறபோதும், எனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.