
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்…விராட் கோலிக்கு பின்னடைவு….
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரிவரிசையில், 2-வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஒரு இடம் பின்தங்கி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்த தென்னாஃப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், தொடர்நாயகன் விருதை வென்ற ஜாதவ், 47-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், நியூசிலாந்தின் பவுல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அசத்திய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், 4-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
தென்னாஃப்ரிக்காவின் தாகிர் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அக்சர் பட்டேல், 9-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.