ஹன்ஸி குரோனியேவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் அஞ்சியிருக்கிறேன் - சச்சின்

 
Published : Dec 05, 2016, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
ஹன்ஸி குரோனியேவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் அஞ்சியிருக்கிறேன் - சச்சின்

சுருக்கம்

முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹன்ஸி குரோனியேவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் அஞ்சியிருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சச்சின் மேலும் கூறியதாவது: சேவாக் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடைய ஆட்டம் எனக்கு விருந்தாக அமைந்தது. ஏனெனில் அவர் அடுத்தடுத்து என்ன மாதிரியான ஷாட்டை ஆடுவார் என்பதை கணிப்பது கடினம். அவருடன் இணைந்து விளையாடியபோது அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது. சில காலம் அவருடன் இணைந்து விளையாடிய பிறகே அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹன்ஸி குரோனியேவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் அஞ்சியிருக்கிறேன். அவருடைய பந்துவீச்சை பற்றி விவரிப்பது கடினம். அவர் பலமுறை என்னை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா சிறப்புமிக்க வீரர். கிரிக்கெட்டுக்கு வெளியே எனக்கு பிடித்த விளையாட்டு வீரர் ரோஜர் ஃபெடரர். நான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் ஷோயிப் அக்தரும், பிரெட் லீயும்தான் அதிவேகப் பந்துவீச்சாளர்கள் என்றார்.
சச்சினும், சேவாக்கும் ஏராளமான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கி இந்திய ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?