
ஆல்பைன் கம்பைன்டு ஸ்லாலோம் பனிச்சறுக்கு போட்டியில் முதலிடம் பிடித்த ஆஸ்திரியாவின் மார்சல் ஹிர்ஸ்சர் ஒலிம்பிக்கில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரியாவின் பியோங்சாங்கில் இந்தப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன். ஆல்பைன் கம்பைன்டு ஸ்லாலோம் பனிச்சறுக்கு போட்டியில் ஆஸ்திரியாவின் மார்சல் ஹிர்ஸ்சர் (28) முதலிடம் பிடித்தார். இவர், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
அதேபோன்று, காங்னியங் நகரில் நடைபெற்ற 1,500 மீட்டர் பிரிவில் நேற்று தங்கம் வென்றதையடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நெதர்லாந்து வீரர் கே.நுயிஸ்..
காங்னியங் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 500 மீட்டர் ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஈடுபட்ட இத்தாலி வீராங்கனை அரியன்னா ஃபான்டானா. இவர், இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் இதுவரை 6 பதக்கங்களை வென்றிருக்கிறார்.
பனிச்சறுக்கில் ஒரு வகையான கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் விளையாட்டுப் போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்ற ஸ்வீடனின் ஸ்டினா நில்சன்.
பனிச்சறுக்கில் ஒரு வகையான லூஜ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற ஜெர்மனி வீராங்கனை நடாலி கிசென்பெர்கர்.
கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் முதலிடம் வந்த நார்வே வீரர் ஜோஹன்னஸ் ஹோஸ்ஃப்டோட்.பியோங்சாங் ஒலிம்பிக்கின் சின்னமான 'வெள்ளைப் புலி'யை கையில் ஏந்தி மகிழ்ச்சி அடைந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.