
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் சர்ச்சைகள் ஏற்பட்டு, கோபமான நிலைக்கு செல்வதென்பது இரு அணி வரலாற்றின் ஒரு பகுதி என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் நேற்றுக் கூறியது:
“என்னைப் பொருத்த வரையில் விராட் கோலி மிகச் சிறந்த தலைமைப் பண்பு உடையவர். அவர் தனது அணியையும், தேசத்தையும் தன்னோடே அழைத்துச் செல்கிறார்.
தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இதுவரை அதிக ஓட்டங்கள் ஸ்கோர் செய்யாமல் இருக்கலாம். ஆனால், தர்மசாலாவில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் அதற்கெல்லாம் சேர்த்து ஓட்டங்கள் விளாசுவார் என்று எண்ணுகிறேன்.
இந்தத் தொடரில், விளையாட்டு தவிர்த்து இரு அணிகளுக்கு இடையே எழும் சர்ச்சைகளை சரியான வகையில் கையாண்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், கடந்த 2008-ஆம் ஆண்டு தொடரின்போது ஏற்பட்ட சர்ச்சை அளவுக்கு பெரிதாகாமல் இருப்பதில் மகிழ்ச்சியே.
கிரிக்கெட்டில் எதிரணிகளாக இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் சர்ச்சைகள் என்பது ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். கோபமான நிலைக்கு செல்வதென்பது, இரு அணி வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
இறுதியில், இரு அணியினருமே எதிரணியினரை ஒரு போட்டியாளராக எண்ணி மதிப்புடன் இருப்பார்கள். இந்திய, ஆஸ்திரேலிய அணியினர் ஒரு நல்ல போட்டியாளர்கள்” என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.